ஏர் நமிபியா பொருளடக்கம் இலக்குகள் கோட்ஷேர் ஒப்பந்தங்கள் உயர்தர வழித்தடங்கள் விமானக் குழு தற்போதைய விமானக் குழு ஓய்வு பெற்ற விமானக் குழு குறிப்புகள் வழிசெலுத்தல் பட்டிதிருத்தி உதவுங்கள்Air Namibia – Company ProfileAir Namibia – Contact UsFlight Schedule (Effective 27 October 2013 – 30 November 2013)மூல முகவரியிலிருந்து"Airline Routes"the originalAir Namibia flightAbout us – History | Air Namibiaமூல முகவரியிலிருந்து
விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்விமானசேவை நிறுவனங்கள்
நமிபியாஆப்பிரிக்காஐரோப்பாவில்
ஏர் நமிபியா
Jump to navigation
Jump to search
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஏர் நமிபியா பிரைவேட் லிமிடெட் எனும் இந்த விமானச் சேவை வணிக ரீதியாக ஏர் நமிபியா எனவும் அழைக்கப்படுகிறது.[1] இது நமிபியா நாட்டின் தேசிய விமானச் சேவையாகும். இது தனது தலைமையகத்தினை விண்டோக் எனும் பகுதியில் கொண்டு செயல்படுகிறது.[2] கால அட்டவணைப்படி உள்நாட்டு பகுதிகளுக்கான இலக்குகள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான இலக்குகள் மற்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கான இலக்குகள் ஆகியவற்றினை இவை கொண்டுள்ளன. இதன் சர்வதேச தலைமையகம் விண்டோக் ஹோசே குடகோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இதன் உள்நாட்டு தலைமையகம் சிறிய விண்டோக் ஈரோஸ் விமான நிலையம் ஆகும்.
டிசம்பர் 2013 இன் படி, நமிபியா விமானச் சேவை முழுவதும் நமிபியா நாட்டு அரசிற்கு சொந்தமானது. சர்வதேச வான்வழிப் போக்குவரத்து குழுமம் மற்றும் ஆப்பிரிக்க விமானச் சேவைகளின் குழுமம் ஆகிய இரண்டிலும் ஏர் நமிபியா உறுப்பினர்களாக உள்ளது.
பொருளடக்கம்
1 இலக்குகள்
2 கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
3 உயர்தர வழித்தடங்கள்
4 விமானக் குழு
5 தற்போதைய விமானக் குழு
6 ஓய்வு பெற்ற விமானக் குழு
7 குறிப்புகள்
இலக்குகள்
அக்டோபர் 2013 இன் படி, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள எட்டு நாடுகளின் 16 இலக்குகள் மற்றும் 17 விமான நிலையங்களை இலக்குகளாகக் கொண்டு ஏர் நமிபியா விமானச் சேவை செயல்படுகிறது. இதில் எட்டு இலக்குகள் உள்நாட்டு இலக்குகள் ஆகும்.[3] ஆகஸ்ட் 2013 இன் படி, தனிப்பட்ட பகுதிகளுக்காக பெரிய வழித்தடத்தினில் அடிக்கடி பயணிப்பது இதுவே. ஏனெனில், ஏர் நமிபியாவின் அநேக விமானங்கள் விண்டோக் – ஜோஹன்ஸ்பெர்க் மற்றும் விண்டோக் – கேப் டவுன் ஆகிய தென்னாப்பிரிக்க பகுதிகளுக்கு தொடர்ச்சியாக விமானங்களைச் செயல்படுத்துகிறது.
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
ஜூலை 2013 இன் படி, ஏர் நமிபியா விமானச் சேவை நிறுவனம், பின்வரும் விமானச் சேவை நிறுவனங்களுடன் தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது. (அவற்றின் தற்போதைய வழித்தடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன)
கென்யா ஏர்வேஸ் (ஜோஹன்ஸ்பெர்க் – நைரோபி – ஜோஹன்ஸ்பெர்க், லுசாகா – நைரோபி - லுசாகா) [4]
உயர்தர வழித்தடங்கள்
ஏர் நமிபியா விமானச் சேவை நிறுவனம் ஜோஹன்ஸ்பெர்க் – விண்டோக், விண்டோக் – ஜோஹன்ஸ்பெர்க், விண்டோக் – கேப் டவுன் மற்றும் நைரோபி – ஜோஹன்ஸ்பெர்க் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு வாரத்திற்கு முறையே 21, 20, 14 மற்றும் 14 விமானங்களை இந்நிறுவனம் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானச் சேவைகளாக லுடேரிட்ஸ் – ஆரஞ்சேமுண்ட் மற்றும் விக்டோரியா அருவி – மௌன் ஆகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது.[5]
விமானக் குழு
ஏப்ரல் 1999 இல் ஏர் நமிபியா விமானச் சேவை நிறுவனம் போயிங்க் 747-400 கோம்பி ரக விமானத்தினை புதிதாக வாங்கியது. இதற்கு அமெரிக்காவின் எக்ஸ்போர்ட் இம்போர்ட் வங்கி பொருளாதார ரீதியில் உதவியது. வெல்விட்சியா என்றழைக்கப்பட்ட இந்த விமானம் அதேயாண்டின் அக்டோபர் மாதம் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய விமானம் ஏசியான ஏர்லைன்ஸ் விமானச் சேவையினால் ஏற்கனவே வாங்கப்படுவதாக இருந்தது. பின்னர் அது இரத்து செய்யப்பட்டு, அதன் பின்னரே ஏர் நமிபியா இந்த விமானத்தினை வாங்கியது. இந்த விமானம் நிறுவனத்தில் நுழைந்தபோது அதுவரை இயங்கிக் கொண்டிருந்த போயிங்க் 747SP ரக விமானத்தினை வெளியேற்றியது. பின்னர் இது 2004 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றது. அதே ஆண்டு ஏர் நமிபியா, மெக்டொனல் டௌகளஸ் – 11 ரக விமானத்தினை பயன்படுத்த ஆரம்பித்தது.
செப்டம்பர் 2013 இல், ஏர் நமிபியா நிறுவனம் தனது முதல் ஏர்பஸ் ஏ330-200 ரக விமானத்தினை டௌளௌஸிடம் இருந்து பெற்றது.[6]
தற்போதைய விமானக் குழு
ஆகஸ்ட் 2014 இன் படி, ஏர் நமிபியா விமானச் சேவை நிறுவனம் பின்வரும் விமானங்களை தனது விமானக் குழுவில் கொண்டுள்ளது.
விமானம் | விமானக்,குழுவில் இருப்பவை | ஆர்டர் | பயணிகள் | ||
---|---|---|---|---|---|
பெருமைமிக்க,(வணிக),வகுப்பு | பொருளாதார வகுப்பு | மொத்தம் | |||
ஏர்பஸ் A319-100 | 4 | 16 | 96 | 112 | |
ஏர்பஸ் A330-200 | 2 | 30 | 214 | 244 | |
எம்பெரர் ERJ | 4 | 37 | 37 | ||
மொத்தம் | 10 |
ஓய்வு பெற்ற விமானக் குழு
ஏர் நமிபியா விமானச் சேவை நிறுவனம் பின்வரும் விமானங்களை இதற்குமுன் பயன்படுத்தியுள்ளது.
- ஏர்பஸ் A340-300
- ஏடிஆர் 42
- பீச்கிராஃப்ட் 1900D
- போயிங்க் 727
- போயிங்க் 737-200
- போயிங்க் 737-200C
- போயிங்க் 737-500
- போயிங்க் 737-800
- போயிங்க் 747SP
- போயிங்க் 747-300
- போயிங்க் 747-400
- போயிங்க் 747-400 கோம்பி
- போயிங்க் 767-300ER
- செஸ்னா 182
- செஸ்னா 210
- செஸ்னா 310
- செஸ்னா 402
- செஸ்னா 404
- செஸ்னா 414
- கான்வாயர் 580
- டௌக்ளஸ் C-47A
- டௌக்ளஸ் C-47B
- டௌக்ளஸ் C-54A
- டௌக்ளஸ் C-54B
- டிஎச்சி-8-300
- Do328-310 ஜெட்
- டௌக்ளஸ் DC-4
- டௌக்ளஸ் DC-6B
- ஃபைர்சைல்ட் ஹில்லர் FH-227
- ஃபோக்கர் F-28-3000
- ஃபோக்கர் F-28-4000
- HS 748 சீரியஸ் 2A
- இந்தோனேசியன் ஏரோஸ்பேஸ் CN-235
- மெக்டொனல் டௌக்ளஸ் MD-11
- நவஜோ
- செனேகா
குறிப்புகள்
↑ "Air Namibia – Company Profile". Air Namibia. பார்த்த நாள் 25 September 2015.
↑ "Air Namibia – Contact Us". Air Namibia. பார்த்த நாள் 25 September 2015.
↑ "Flight Schedule (Effective 27 October 2013 – 30 November 2013)". Air Namibia. மூல முகவரியிலிருந்து 25 September 2015 அன்று பரணிடப்பட்டது.
↑ "Airline Routes". Air Transport World. 15 August 2013. Archived from the original on 25 September 2015. http://www.webcitation.org/6IvbHYN8g. "Kenya Airways and Air Namibia have signed a codeshare allowing connections between the airlines’ Nairobi and Windhoek hubs through Johannesburg in South Africa and Lusaka in Zambia."
↑ "Air Namibia flight". cleartrip.com. பார்த்த நாள் 25 September 2015.
↑ "About us – History | Air Namibia". Air Namibia. மூல முகவரியிலிருந்து 25 September 2015 அன்று பரணிடப்பட்டது.
பகுப்புகள்:
- விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்
- விமானசேவை நிறுவனங்கள்
(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.124","walltime":"0.150","ppvisitednodes":"value":1153,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":11217,"limit":2097152,"templateargumentsize":"value":4112,"limit":2097152,"expansiondepth":"value":13,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":522,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 128.123 1 -total"," 31.65% 40.545 1 வார்ப்புரு:விக்கியாக்கம்"," 29.36% 37.611 1 வார்ப்புரு:Ambox"," 27.28% 34.952 1 வார்ப்புரு:Cite_news"," 19.78% 25.340 1 வார்ப்புரு:Citation/core"," 13.82% 17.701 5 வார்ப்புரு:Cite_web"," 2.09% 2.684 2 வார்ப்புரு:Citation/make_link"," 1.90% 2.436 3 வார்ப்புரு:Spaced_ndash"," 1.63% 2.093 1 வார்ப்புரு:Ndash"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.014","limit":"10.000","limitreport-memusage":"value":750437,"limit":52428800,"cachereport":"origin":"mw1325","timestamp":"20190815040545","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b8fu0bb0u0bcd u0ba8u0baeu0bbfu0baau0bbfu0bafu0bbe","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE","sameAs":"http://www.wikidata.org/entity/Q407624","mainEntity":"http://www.wikidata.org/entity/Q407624","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2015-09-25T12:25:00Z","dateModified":"2019-06-01T17:26:33Z"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":292,"wgHostname":"mw1325"););